< Back
மாநில செய்திகள்
வாலிபரிடம் நூதன முறையில் ரூ.50 ஆயிரம் மோசடி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

வாலிபரிடம் நூதன முறையில் ரூ.50 ஆயிரம் மோசடி

தினத்தந்தி
|
15 Jun 2022 5:16 PM GMT

வாலிபரிடம் நூதன முறையில் ரூ.50 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.


ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி கீழக்கிடாரம் முத்துச்சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 28). இவர் என்ஜினீயரிங் படித்துவிட்டு அரசு வேலைக்காக படித்து வருகிறார். இவர் தனியார் வங்கி ஒன்றின் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் இந்த கார்டின் மூலம் பணபரிவர்த்தனை செய்தபோது அதற்கான குறுஞ்செய்தி வரவில்லையாம். இதனால் அவர் இணையதளத்தில் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை தேடிப்பிடித்து அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரின் எண்ணிற்கு தொடர்பு கொண்ட நபர் சென்னை நுங்கம்பாக்கம் வங்கி தலைமை அலுவலகத்தில் இருந்து ரவிக்குமார் பேசுவதாக கூறியுள்ளார். அப்போது நீங்கள் வைத்துள்ள கிரெடிட் கார்டுடன் உங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண்ணை இணைக்க வேண்டும். அதற்குரிய ஓ.டி.பி. எண்ணை தெரிவித்தால் நிவர்த்தி செய்வதாக தெரிவித்துள்ளார். இதை நம்பிய நவநீதகிருஷ்ணன் ஓ.டி.பி. எண்ணை தெரிவித்தார். சில நிமிடங்கள் கழித்து அவரின் கணக்கினை சரிபார்த்தபோது 3 தவணைகளில் ரூ.50 ஆயிரத்து 730 எடுக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் சைபர்கிரைமில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்