< Back
மாநில செய்திகள்
ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ. 15½ லட்சம் மோசடி
சிவகங்கை
மாநில செய்திகள்

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ. 15½ லட்சம் மோசடி

தினத்தந்தி
|
14 Jun 2022 5:55 PM GMT

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ. 15½ லட்சம் மோசடி செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை,

ஷேர் மார்க்கெட்டில் பணம் செலுத்தி கூடுதல் லாபம் பெறலாம் என்று கூறி ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ. 15½ லட்சம் மோசடி செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ரூ.15½ லட்சம்

காரைக்குடி கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவி ராஜா (வயது 69). ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த மாதம் 2-ம் தேதி இவருடைய செல்போனில் மும்பையில் இருந்து தொடர்புகொண்ட ஒருவர் ஷேர் மார்க்கெட்டில் பணம் செலுத்தினால் கூடுதல் பணம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இதை நம்பிய சஞ்சீவி ராஜா பல தவணையில் ரூ. 15 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

அதன் பின்னர் சில நாட்கள் கழித்து அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது பதில் ஏதும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சஞ்சீவி ராஜா இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் செய்தார்.

விசாரணை

அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் விமலா, சப்-இன்ஸ்பெக்டர் முத்து முனியசாமி, ஏட்டுகள் ஸ்ரீதர், வினோத்குமார் ஆகியோர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்