< Back
மாநில செய்திகள்
கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.26 லட்சம் மோசடி
தர்மபுரி
மாநில செய்திகள்

கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.26 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
27 May 2022 5:52 PM GMT

தர்மபுரியில் போலி பத்திரத்தை உருவாக்கி கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.26 லட்சம் மோசடி செய்த பள்ளி தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் போளையம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சாம்பசிவம். இவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மொரப்பூர் ஆசிரியர்கள் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் தலைவராக பணிபுரிந்து வந்தார். அந்த காலகட்டத்தில் போலி பத்திரத்தை உருவாக்கி ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் முறைகேடு செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மணிகண்டன் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தலைமையாசிரியர் சாம்பசிவத்தை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்