< Back
மாநில செய்திகள்
கோட்டக்குப்பத்தில்  அடகு கடைகளில் போலி நகைகளை வைத்து ரூ.74 ஆயிரம் மோசடி  பெண் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
விழுப்புரம்
மாநில செய்திகள்

கோட்டக்குப்பத்தில் அடகு கடைகளில் போலி நகைகளை வைத்து ரூ.74 ஆயிரம் மோசடி பெண் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
22 May 2022 5:35 PM GMT

கோட்டக்குப்பத்தில் அடகு கடைகளில் போலி நகைகளை வைத்து ரூ.74 ஆயிரம் மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசாா் தேடி வருகின்றனா்.

வானூர்,

புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்தவர் சுசில்குமார் (வயது 50). இவர் கோட்டக்குப்பம் அருகே சின்ன முதலியார் சாவடியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு கடந்த 20-ந் தேதியன்று பொம்மையார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி கங்கா (வயது 36) 10 கிராம் வளையலை அடகு வைத்து ரூ.30 ஆயிரம் பெற்றுச்சென்றார்.

இதன்பின் அந்த நகையை பரிசோதித்தபோது தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை என்பது தெரியவந்தது. இதேபோல் பிள்ளைச்சாவடியில் உள்ள அடகு கடையில் கடந்த 13-ந் தேதி ரூ.12 ஆயிரமும், கோட்டக்குப்பத்தில் உள்ள ராஜேந்திரகுமாரின் அடகு கடையில் ரூ.32 ஆயிரமும் போலி நகைகள் வைத்து கங்கா மோசடி செய்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனா். 3 அடகு கடைகளுக்கு கங்கா சென்றபோது உடன் 2 ஆண்களை அழைத்துச் சென்றுள்ளார். எனவே இந்த வழக்கில் கங்கா உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்