< Back
மாநில செய்திகள்
கொண்டலாம்பட்டி அருகேவியாபாரியிடம் 6 கிலோ வெள்ளிக்கட்டி மோசடிபோலீசார் விசாரணை
சேலம்
மாநில செய்திகள்

கொண்டலாம்பட்டி அருகேவியாபாரியிடம் 6 கிலோ வெள்ளிக்கட்டி மோசடிபோலீசார் விசாரணை

தினத்தந்தி
|
3 Aug 2023 2:00 AM IST

கொண்டலாம்பட்டி

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்தவர் ஸ்ரீ ஆனந்தராஜன் (வயது 47). இவர் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவரிடம் இருந்து வெள்ளி கொலுசு செய்து தருவதாக கூறி சிவதாபுரம் அம்மன் கோவில் வட்டம் மொரம்புக்காட்டை சேர்ந்த குமார் (48) என்பவர் 6 கிலோ எடையுள்ள ரூ.4½ லட்சம் மதிப்பிலான வெள்ளிக்கட்டிகளை வாங்கி சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் அதன்பிறகு நீண்ட நாட்கள் ஆகியும் குமார் வெள்ளி கொலுசை உற்பத்தி செய்து ஸ்ரீ ஆனந்தராஜனிடம் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் கேட்ட போது, வெள்ளிக்கட்டிகளை வாங்கவில்லை என குமார் மறுத்ததுடன், அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஸ்ரீ ஆனந்தராஜன் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்