< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 4 பேர் சென்னை வந்தனர்
|19 May 2022 1:10 PM IST
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 4 பேர் சென்னை வந்தனர்.
ராமநாதபுரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் மத்திய அரசின் உதவியுடன் இலங்கை சிறையில் இருந்து 4 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் 4 மீனவர்களையும் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் அனுப்பி வைத்தனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த 4 மீனவர்களையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அவர்களின் சொந்த ஊர்களுக்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.