பிராட்வே பஸ் நிறுத்தத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து 4 பேர் காயம்
|பிராட்வே பஸ் நிறுத்தத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் 4 பேர் காயம் அடைந்தனர்.
பெரம்பூர்,
சென்னை பிராட்வே பஸ் நிறுத்தத்தில் இருந்து சென்னை மற்றும் புறநகர் செல்லும் பயணிகள் வந்து காத்திருந்து பஸ் ஏறுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று பிராட்வே பஸ் நிறுத்தத்தில் உள்ள பழமைவாய்ந்த அரசமரத்திலிருந்து பெரிய மரக்கிளை திடீரென முறிந்து விழுந்தது. அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த பொது மக்கள் என்னவோ ஏதோ என்று அலறி அடித்து ஓடினார்கள்.
இதில் அப்பகுதியில் பிளாட்பார வாசியான காயத்ரி மற்றும் வசந்தா என்ற இரு பெண்களுக்கும் தலையிலும் கையிலும் காயம் ஏற்பட்டது. அங்கு நின்ற மாநகராட்சி பஸ் கண்டக்டர் சுதாகர் மற்றும் டிரைவர் பாஸ்கர் ஆகியோருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இவர்கள் 4 பேரையும் அப்பகுதியினர் மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கா அனுப்பி வைத்தனர்.
இந்த தகவலை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மரக்கிளையை வெட்டி அகற்றினார்கள். அப்பொழுது பஸ் நிறுத்தத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.