< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செங்கல்பட்டு அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா

தினத்தந்தி
|
13 March 2023 2:39 PM IST

செங்கல்பட்டு அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் கிராமத்தில் ரெயில்வே பாதை உள்ளது. இந்த இருப்பு பாதையை கடந்து தான் சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு செங்கல்பட்டிற்கு செல்ல வேண்டி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒத்திவாக்கத்தில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. சில ஆண்டுகளில் பாலம் கட்டும் பணி கைவிடப்பட்டது. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் நீண்ட நேரம் ரெயில்வே கிராசிங்கில் நின்று செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் படி பாதியில் நிறுத்தப்பட்ட மேம்பால பணிகளை மீண்டும் தொடங்கிட ரூ.26.58 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் எம்.பி. செல்வம், பாலாஜி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்கள்.

இதில் தேசிய நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அருணா, கண்காணிப்பு பொறியாளர் தனசேகரன், உதவி கோட்ட பொறியாளர் திருஞான சம்பந்தன், உதவி பொறியாளர் ராகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்