< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
ரூ.81 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா
|23 July 2023 3:00 AM IST
நெல்லை கல்லணை பெண்கள் பள்ளியில் ரூ.81 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.81 லட்சத்து 25 ஆயிரம் செலவில் 2 தளத்துடன் கூடிய 6 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படுகிறது. இந்த கட்டிட பணிக்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. ஞானதிரவியம் எம்.பி., மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி, நெல்லை மாநகர தி.மு.க. செயலாளர் சு.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.