< Back
மாநில செய்திகள்
நாற்பதுக்கு நாற்பது நியாயத்தால் நிகழ்ந்தது: கவிஞர் வைரமுத்து
மாநில செய்திகள்

நாற்பதுக்கு நாற்பது நியாயத்தால் நிகழ்ந்தது: கவிஞர் வைரமுத்து

தினத்தந்தி
|
5 Jun 2024 9:26 AM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் நடந்து முடிந்த 18-வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையில் தலா ஒரு அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 4 முனைப் போட்டி நிலவியது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவு நேற்று வெளியானதில், மத்தியில் பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை பெற்ற நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களையும் தி.மு.க. கூட்டணியே கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் 'நாற்பதும் நமதே' என்ற கோஷமும் நனவானது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

"நாற்பதுக்கு நாற்பது என்பது மாயத்தால் நிகழ்ந்ததல்ல நிர்வாகத் திறம் என்ற நியாயத்தால் நிகழ்ந்தது. இந்த வெற்றி உங்கள் ஆட்சியின் மாட்சிக்குக் கிடைத்த சாட்சி என்று சொல்லி முதல்-அமைச்சருக்குப் பொன்னாடை பூட்டினேன். பதற்றமில்லாமல் வெற்றியின் பகட்டு இல்லாமல் இயல்பான புன்னகையோடு இருந்தார். வென்றார்க்கு அழகு தோற்றாரை மதித்தல்; தோற்றார்க்கு அழகு வென்றாரை வியத்தல்; பதவிக்கு அழகு உதவிகள் தொடர்தல்; மக்களுக்கு அழகு மறுவேலை பார்த்தல்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்