< Back
மாநில செய்திகள்
பார்முலா 4 கார் பந்தயத்தால் சென்னை மாநகரம் உலக அளவில் அறியப்படும்: கார்த்தி சிதம்பரம்
மாநில செய்திகள்

பார்முலா 4 கார் பந்தயத்தால் சென்னை மாநகரம் உலக அளவில் அறியப்படும்: கார்த்தி சிதம்பரம்

தினத்தந்தி
|
3 Sep 2024 2:05 AM GMT

இந்தி திணிப்பை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

கோவை,

கோவையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடு பெறுவது தேவையான ஒன்று. அதை நான் வரவேற்கிறேன். இதனால் பல வகையான வேலை வாய்ப்பு உருவாக்க வாய்ப்புள்ளது. நடந்து முடிந்த பார்முலா 4 கார் பந்தயத்தால் சென்னை மாநகரம் உலக அளவில் அறியப்படும்.

கூவம்நதியை சுத்தப்படுத்த பல கோடி ரூபாய் செலவு செய்ததாக சென்னை மேயர் சொல்லி இருக்கிறார். அதற்கு நான் முழுமையான வெள்ளை அறிக்கையை கேட்டு இருக்கிறேன். மேலும் குறிப்பிட்ட தொகை செலவிட்டும் ஆறு ஏன் தூய்மை அடையவில்லை. அதற்கான காரணத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறேன். இந்தி திணிப்பை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்