< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவு தினம்: தி.மு.க. அமைதி பேரணி
|3 Feb 2024 9:06 AM IST
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று(பிப்.3) அனுசரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினம் இன்று(பிப்.3) அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அண்ணாவின் நினைவுதினத்தையொட்டி இன்று சென்னையில் தி.மு.க. சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த அமைதிப்பேரணி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தொடங்கி அண்ணா நினைவிடத்தில் நிறைவடைந்தது. பேரணியின் நிறைவாக அண்ணா நினைவிடத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த அமைதிப்பேரணியில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.