< Back
மாநில செய்திகள்
திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய முன்னாள் ரெயில்வே ஊழியர்
சென்னை
மாநில செய்திகள்

திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய முன்னாள் ரெயில்வே ஊழியர்

தினத்தந்தி
|
3 March 2023 2:17 PM IST

திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய முன்னாள் ரெயில்வே ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர் ஜீவன்லால் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 55). திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே உள்ள மாட்டுமந்தை மேம்பாலம் அருகே நிறுத்தி இருந்த இவரது மோட்டார்சைக்கிள் திருட்டுபோனது. இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் நாகேந்திரன் புகார் அளித்தார்.

தனிப்படை போலீசார், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த விஜயகாந்த் (வயது 45) என்பவரை கைது செய்து விசாரித்தனர். அதில் அவர், ரெயில்வே துறையில் பணியாற்றி வந்ததும், பூக்கடை பகுதியில் சாலையில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய வழக்கில் சிறைக்கு சென்றதால் ரெயில்வே வேலையில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும் தெரிய வந்தது

மேலும் இவர், பூக்கடை, யானைக்கவுனி, திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்களை திருடி, புதுப்பேட்டை பகுதியில் குறைந்த விலைக்கு விற்று பணத்தை வாங்கி சென்றதும் தெரிய வந்தது. கைதான விஜயகாந்தை போலீசார் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்