< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா சாமி தரிசனம்
|22 Aug 2024 9:21 PM IST
ஸ்ரீரங்கம் கோவிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா சாமி தரிசனம் செய்தார்.
திருச்சி,
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் பிரதமர் தேவகவுடா பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலமாக வந்தார். கோவிலில் உள்ள மூலவர் பெரியபெருமாள் சன்னதி, தாயார் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு பேட்டரி கார்கள் மூலமாக சென்று தரிசனம் செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிடப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார். மேலும் காவிரி பிரச்சினை குறித்து தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளுக்கு தெரியும் என்றும், அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.