< Back
மாநில செய்திகள்
பாமக முன்னாள் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - 4 பேர் கைது
மாநில செய்திகள்

பாமக முன்னாள் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - 4 பேர் கைது

தினத்தந்தி
|
7 July 2024 2:53 PM IST

பாமக முன்னாள் பிரமுகரை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஒரு சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியை சேர்ந்தவர் சங்கர். பாமக கட்சியின் முன்னாள் பிரமுகராக இருந்துள்ளார்.

இந்த நிலையில், இவர் நேற்று தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பர் அவரை அரிவாளால் சரமாடியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். உடலில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த சங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சங்கர் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாமக பிரமுகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கடலூரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், பாமக முன்னாள் பிரமுகர் சங்கரை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஒரு சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சதீஷ், முகிலன், ராஜ்கிரண் உட்பட 4 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்