< Back
மாநில செய்திகள்
மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை - ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்...!
மாநில செய்திகள்

மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை - ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்...!

தினத்தந்தி
|
24 Oct 2022 11:25 AM IST

நேர்மையான, தூய்மையான களபணியாளர் அதிகாரி ராதாகிருஷ்ணன் என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

ஒரு அமைச்சராக எனது கடமையை நான் மனசாட்சியுடன் சரிவர செய்துள்ளேன். ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்டுள்ள கருத்துக்கள், சொன்னதை சொல்லாதது போலவும், சொல்லாததை சொன்னதைப் போலவும் கூறப்பட்டுள்ளது. இதனை சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து சட்டப்படி எதிர்கொள்வேன்.

இந்திய, உலக அளவில் பாராட்டப்பட்ட ஒரு தூய்மையான களபப்ணியாளர் அதிகாரி ராதாகிருஷ்ணன். அவரை பற்றியும் அதில் ஆதாரமற்ற கருத்துகள் செல்லப்பட்டிருக்கின்றனர்.

மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை எனவே இதனை சட்டப்படி எதிர்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார.

மேலும் செய்திகள்