< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீது போலீசில் தி.மு.க. புகார்
|16 March 2023 2:16 AM IST
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீது போலீசில் தி.மு.க.வினர் புகார் அளித்தனர்.
மதுரையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து பழங்காநத்தம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா ஆகியோர் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக கூறி மதுரை சம்மட்டிபுரம் தி.மு.க. பகுதி செயலாளர் தவமணி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சிலர், சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசனிடம் புகார் அளித்தனர்.