< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரியில் பழமையான சிவன் கோவில்களில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆய்வு
மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் பழமையான சிவன் கோவில்களில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆய்வு

தினத்தந்தி
|
17 Feb 2023 2:48 PM IST

கன்னியாகுமரியில் 1000ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான சிவன் கோவில்களில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி,

தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் போலீஸ் ஐ.ஜி.யும்உலக சிவனடியார்கள் திருக் கூட்டத்தின் மாநில ஆலோசகருமான பொன் மாணிக்கவேல் நேற்று மாலை கன்னியாகுமரி வந்தார். அவர் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.

பின்னர் கன்னியாகுமரி சன்னதி தெருவில் அமைந்துஉள்ள 1000ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான சிவன் கோவிலான விஸ்வநாதர் கோவில் மற்றும் 21-வது சக்தி பீடமான பால சவுந்தரி என்ற பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு ஆய்வு செய்தார். இதே போல கன்னியாகுமரி ரெயில் நிலையசந்திப்பில் அமைந்துஉள்ளகுகநாதீஸ் வரர்கோவில்,கன்னியாகு மரிகீழரதிவீதயில் அமைந்து உள்ளசிவன்கோவில்கன்னியாகுமரிவிவேகனந்த புரம் சந்திப்பில் அமைந்து உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய பழமையான சிவன் கோவிலுக்கும் சென்று சாமி கும்பிட்டு விட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த கோவில்களில் உள்ள சுவாமி விக்கிரகங்கள், கல் மண்டபங்கள்,சிற்பங்கள், ஆகியவற்றைபார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாகதெரிசனங்கோப்பு உலகநாயகி அம்மன் சமேத ராகேஸ்வரர் கோவில், ஒழுகினைசேரி சோழராஜா கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் ஆகிய கோவில்களுக்கும்சென்று அவர் ஆய்வுமேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரியில் 1005 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழன் இறந்த பிறகு3-வது வருடத்தில் அவரது வாரிசான ராஜேந்திர சோழனால் புவன நந்தீஸ்வரர் கோவில் என்ற கோவில் கட்டப்பட்டதாக வரலாற்றுசான்றுகள் கூறுகின்றன.

அந்தக் கோவிலை தேடி நான் இங்கு வந்தேன்.ஆனால் நான் பல இடங்களில் தேடி பார்த்தும் அப்படி ஒரு கோவில் இங்கு இருந்தாக கண்டுபிடிக்க முடியவில்லை.அந்த கோவிலையும் காணவில்லை என்று கூறினார்.

மேலும் செய்திகள்