< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம்
|26 Jun 2024 7:17 PM IST
பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை,
காங்கிரஸ் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசர், தனது 75-வது பிறந்த நாளை முன்னிட்டு திருக்கடையூரில் உள்ள பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவிலில் சாமி தரிசனம் செய்த திருநாவுக்கரசர், ஆயுள் ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டார். இதில் திருநாவுக்கரசரின் மகன்கள், மருமகள்கள், மகள், பேரக்குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.