கரூர்
கரூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
|கரூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து தி.மு.க.வினர் பேரணியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க.வினர் அஞ்சலி
கரூர் மாவட்டத்தில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து கரூர் மாவட்ட தி.மு.க.வினர் கட்சி அலுவலகத்தில் இருந்து கோவை ரோட்டின் வழியாக பேரணியாக வந்தனர். பின்னர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இதில் எம்.எல்.ஏக்கள். சிவகாமசுந்தரி, மாணிக்கம், இளங்கோ, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், கரூர் மண்டல தி.மு.க. தலைவர்கள் அன்பரசு, கோல்டு ஸ்பாட் ராஜா, கனகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் அணி
கரூர் பஸ் நிலையம் ஆர்.எம்.எஸ் தபால் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க. இளைஞர் அணியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சக்திவேல் மற்றும் இளைஞரணி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மேலும் கரூர் சட்டமன்ற அலுவலகம், வெண்ணைமலை அன்புக்கரங்கள் பகுதிகளில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஏற்பாட்டில் தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நொய்யல்
கரூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், முனிநாதபுரம், கோம்புப்பாளையம், கரைப்பாளையம், திருக்காடுதுறை, குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், ஓலப்பாளையம், மூலமங்கலம் ஆகிய பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதேபோல் புகழூர் நகர தி.மு.க. சார்பில் வேலாயுதம்பாளையம் மலைவீதி, புகழூர் பை-பாஸ் உள்பட புகழூர் நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவப்படத்திற்கு புகழூர் நகராட்சி தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான சேகர் என்கிற குணசேகரன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். இதில் நகராட்சி துணைத்தலைவர் பிரதாபன், வார்டு கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.