< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார்
|19 Jan 2024 1:59 PM IST
பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்
சென்னை,
தமிழக பாஜகவில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்தார். இதனால் பாஜக மாநில தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் கடந்த 2022 நவம்பர் மாதம் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் இன்று அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார்.