< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்..!
|9 April 2023 12:40 PM IST
அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிப்பதாக மைத்ரேயன் கூறியிருந்தார். இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி மைத்ரேயன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இன்று பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக மைத்ரேயன் டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.