< Back
மாநில செய்திகள்
மழையை எதிர்பார்த்து நெல் விதைத்த விவசாயிகள் ஏமாற்றம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மழையை எதிர்பார்த்து நெல் விதைத்த விவசாயிகள் ஏமாற்றம்

தினத்தந்தி
|
31 Oct 2022 5:40 PM GMT

மழையை எதிர்பார்த்து நெல் விதைத்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

முதுகுளத்தூர்,

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றியுள்ள குமாரகுருச்சி, சாக்குளம், மேலதூவல், காக்கூர், கருமல், வெங்கிட்டாங்குறிச்சி உள்ளிட்ட பல கிராமங்களிலும் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் விவசாய நிலங்களில் நெல் விதை தூவி வருகின்றனர். நெல் விதைைய விவசாய நிலங்களில் தூவி வரும் நிலையில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

தேரிருவேலி, மட்டியாரேந்தல், மல்லல் உள்ளிட்ட ஒரு சில கிராமங்களில் போதிய மழை பெய்யாததால் பயிர்கள் வாடி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாயி ராமலிங்கம் கூறியதாவது:- கடந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதுடன் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மழை பெய்தது. விளைச்சல் நன்றாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை சீசன் 2 வாரத்திற்குமேல் தாமதமாக தொடங்கி உள்ளதுடன் முதுகுளத்தூரை சுற்றிய பல கிராமங்களில் இன்னும் எதிர்பார்த்த அளவு மழை பெய்ய தொடங்கவில்லை.

இதனால் பல கிராமங்களில் நெல் விதை தூவப்பட்ட விவசாய நிலங்கள் நெற் பயிர் வளர தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கின்றன. மழையை நம்பி தான் பல கிராமங்களிலும் நெல் விதைகளை விவசாயிகள் தூவியுள்ளோம்.

கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் மழை நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்