< Back
மாநில செய்திகள்
திருட்டு சம்பவங்களில் துப்பு துலக்க 3 போலீஸ் தனிக்குழுக்கள் அமைப்பு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

திருட்டு சம்பவங்களில் துப்பு துலக்க 3 போலீஸ் தனிக்குழுக்கள் அமைப்பு

தினத்தந்தி
|
4 Oct 2023 12:27 AM IST

திருட்டு சம்பவங்களில் துப்பு துலக்க 3 போலீஸ் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டது தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி நிருபர்களிடம் கூறுகையில், இந்த சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் உள்ளிட்ட குழுவினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பெரம்பலூர் நகரில் சமீபத்தில் அடிக்கடி நடந்து வரும் திருட்டுகள் மற்றும் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் துப்பு துலக்கவும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும், எனது மேற்பார்வையில் தலா ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் என 5 பேர் கொண்ட 3 தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனி குழுக்களை கொண்டு திருட்டு சம்பவங்களில் கண்காணிப்பு கேமரா ஆதராங்கள் மற்றும் கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிள் தடயங்களை வைத்து விரைந்து துப்பு துலக்கப்படும். குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படுவார்கள், என்றார்.

மேலும் செய்திகள்