ராமநாதபுரம்
பருவமழை பொய்த்ததால் கருகும் நெற்பயிர்கள்
|பருவமழை பொய்த்ததால் நெற்பயிர்கள் கருகிவருவதாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
பனைக்குளம்
பருவமழை பொய்த்ததால் நெற்பயிர்கள் கருகிவருவதாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
விவசாய பணி
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரத்திற்கு முன்பு வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்த நிலையில் விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் விவசாய பணிகளை மேற்கொண்டனர். நெல்லை விதைத்து மழைக்காக காத்திருந்த வேளையில் தற்போது வடகிழக்கு பருவமழை போதிய அளவு மழை பெய்யாததால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். மாவட்டத்தில் வாலாந்தரவை தெற்கு காட்டூர், காரன், கோரவல்லி, தாமரைக்குளம், மானாங்குடி, நொச்சி ஊருணி, பூமாலை வலசை, கடுக்காய் வலசை, தேர்போகி, அத்தியூத்து உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆண்டு தோறும் நெற்பயிர்களை சொந்த இடத்தில் விதைத்து விதைக்கப்பட்ட பயிர்களை பாதுகாப்பாக வளர்த்து இறுதியில் விவசாய பணிகளை முடிப்பார்கள்.
வெயில்-பனி
இந்த நிலையில் கடந்த 2 வாரமாக மாவட்டத்தில் கடும் வெயில் பனி காரணமாக நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் வங்கி மூலம் விவசாய கடன் பெற்று நெல் பயிரிட்ட விவசாயிகள் மழை இல்லாததால் அதிகமான பாரம்பரிய விவசாயிகள் பாதிக்கப்பட்டுஉள்ளனர். இதுகுறித்து வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு காட்டூர் கிராமத்தை சேர்ந்த சவுந்தரராஜன் கூறியதாவது:- தென்னை உள்ளிட்ட நெற்பயிர்கள் விவசாயம் செய்யும் ஏழைகள் மிகுந்த ஆர்வத்துடன் விவசாய பணிகளில் ஈடுபட்டு அதிக பணியாளர்களை வைத்து தினந்தோறும் ஊதியம் கொடுத்து பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் நெற்பயிர்கள் அனைத்தும் கருகி வருகின்றன. ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.