< Back
மாநில செய்திகள்
ஆன்லைனில் விற்பனை செய்து தருவதாக கூறி ரூ.10 லட்சம் பூண்டு வாங்கி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

ஆன்லைனில் விற்பனை செய்து தருவதாக கூறி ரூ.10 லட்சம் பூண்டு வாங்கி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை

தினத்தந்தி
|
21 March 2023 1:32 AM IST

ஆன்லைனில் விற்பனை செய்து தருவதாக கூறி ரூ.10 லட்சம் மதிப்பிலான பூண்டை வாங்கி கொண்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தஞ்சை வியாபாரி புகார் அளித்துள்ளார்.

ஆன்லைனில் விற்பனை செய்து தருவதாக கூறி ரூ.10 லட்சம் மதிப்பிலான பூண்டை வாங்கி கொண்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தஞ்சை வியாபாரி புகார் அளித்துள்ளார்.

ஆன்லைனில் விற்பனை செய்து தருவதாக...

தஞ்சையை அடுத்த நா.வல்லுண்டாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். வியாபாரியான இவர், நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்தை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் வெள்ளைப் பூண்டு மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். வடஇந்தியாவில் இருந்து வெள்ளைப் பூண்டை மொத்தமாக வாங்கி தஞ்சையில் சில்லரை விற்பனை செய்வது வழக்கம்.

கடந்த 2021-ம் ஆண்டு என்னை தொடர்புகொண்ட கோவை உக்கடத்தை சேர்ந்த 2 பேர் மற்றும் தஞ்சை பொய்யுண்டார்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவர் ஆகியோர் ஒரு லோடு வெள்ளைப்பூண்டுவை ஆன்லைனில் விற்பனை செய்வதாக கூறினர்.

ரூ.10 லட்சம் தரவில்லை

அவர்கள் அளித்த வாக்குறுதியை நம்பி ரூ.12 லட்சம் மதிப்பிலான வெள்ளைப் பூண்டுவை நான் அவர்களிடம் வழங்கினேன். ஆனால் அவர்கள் பூண்டுக்குரிய பணத்தை கொடுக்கவில்லை.

இது தொடர்பாக நான் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் ரூ.2 லட்சம் தந்தனர். ஆனால் அதன் பிறகு மீண்டும் பணம் தரவில்லை.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

என்னைப்போன்று தமிழகம் முழுவதும் உள்ள பிற மொத்த வியாபாரிகளிடமும் ஏலக்காய், மிளகு, எண்ணெய் என பல கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகளை வாங்கி அதனை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதாக கூறி அவர்கள் ஏமாற்றி வருகின்றனர்.

இந்த மோசடியால் வடமாநிலத்தில் உள்ள மொத்த வியாபாரிகள் தமிழகத்துக்கு மளிகைப் பொருட்களை அனுப்புவதையே தவிர்த்து வருகின்றனர். எனவே என்னிடம் வெள்ளைப்பூண்டு வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு வரவேண்டிய தொகையை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்