< Back
மாநில செய்திகள்
என்றென்றும் அதிமுககாரன் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிவு..!
மாநில செய்திகள்

"என்றென்றும் அதிமுககாரன்" - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிவு..!

தினத்தந்தி
|
30 Sept 2023 10:41 AM IST

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன்னுடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "என்றென்றும் அதிமுககாரன்" என்று பதிவிட்டுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் அதிமுக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கூட்டணியை முறித்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக தலைமை நிலைய செயலாளரும் கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.பி.வேலுமணியை பாஜக பயன்படுத்தும் என்று பேச்சு எழுந்தது. எஸ்.பி.வேலுமணி பாஜகவுக்கு தாவுவதாகவும் அதிமுகவை உடைப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்தன.

மேலும் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என்றும் எஸ்.பி.வேலுமணி சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன்னுடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், அதிமுக கொடியுடன் மிதிவண்டி பேரணி நடத்திய புகைப்படத்தை பகிர்ந்து "என்றென்றும் அதிமுககாரன்" என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்