< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
வனகாவலர் திடீர் சாவு
|3 April 2023 1:46 AM IST
வனகாவலர் திடீரென்று இறந்தார்.
விக்கிரமசிங்கபுரம்:
நெல்லை அருகே சீதபற்பநல்லூரைச் சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 50). இவர் பாபநாசம் முண்டந்துறையில் வன காவலராக வேலை செய்து வந்தார். இதற்காக அங்குள்ள வனகுடியிருப்பில் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.
நேற்று ஷாஜகானின் மனைவி வெளியூருக்கு சென்று விட்டார். இதனால் ஷாஜகான் மட்டும் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது மதியம் திடீரென்று ஷாஜகான் மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.