< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கொடைக்கானல் வனப்பகுதிகளில் தொடர்ந்து 4-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ
|28 April 2024 9:29 PM IST
தொடர்ந்து 4 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள மேல்மலை கிராம வனப்பகுதிகளில் தொடர்ந்து 4-வது நாளாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. கோடை காலத்தில் கடும் வெப்பத்தால் வனப்பகுதிகளில் அவ்வப்போது தீப்பற்றுவதும், அணைவதும் வாடிக்கையாக இருந்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களாக பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் பகுதிகளில் தீ பரவி கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.
இதனால் வனப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மரங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த காட்டுத் தீயை அணைக்க தேனி, பழனி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தீயை அணைக்க தீவிரமாக போராடி வருகின்றனர்.