< Back
மாநில செய்திகள்
சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

தினத்தந்தி
|
31 Dec 2022 12:15 AM IST

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் குவிந்து வருகின்றன. இவை முன்கூட்டியே சொந்த நாட்டுக்கு செல்ல தயாராகி வருகின்றன.

வேதாரண்யம்:

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் குவிந்து வருகின்றன. இவை முன்கூட்டியே சொந்த நாட்டுக்கு செல்ல தயாராகி வருகின்றன.

கோடியக்கரை சரணாலயம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷியா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 290 வகையான லட்சக்கணக்கான பறவைகள் வந்து செல்வது வழக்கம். கோடியக்கரை சரணாலயத்திற்கு செங்கால்நாரை, கூழைகிடா, பூநாரை, கடல்காகம், கடல்ஆலா மற்றும் உள்ளான் வகைகள், வரி தலைவாத்து, 40-க்கும் மேற்பட்ட உள்ளான் வகைகள் உள்ளிட்ட பறவைகள் லட்சக்கணக்கில் வந்துள்ளன.

குவியும் வெளிநாட்டு பறவைகள்

கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் கோடியக்கரை சரணாலயத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. தற்போது மழைநீர் வடிந்து வருகிறது. பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிலவுவதாலும், அதிக அளவில் பறவைகளுக்கு ஏற்ற உணவு கிடைப்பதாலும் இந்த ஆண்டு கோடியக்கரை சரணாலயத்திற்கு கூட்டம், கூட்டமாக வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன.

இந்த பறவைகளை சரணாலயத்தில் இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு,பம்புஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் கூட்டம், கூட்டமாக பறவைகள் இரை தேடுவதை காண்பது கண்கொள்ளக்காட்சியாக இருக்கும். இதை சுற்றலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

முன்கூட்டியே செல்ல தயாரிக்கின்றன

வழக்கமாக மார்ச் மாதம் வரை சீசன் என்றாலும் பிப்ரவரி மாதமே சொந்த நாட்டிற்கு பறவைகள் புறப்பட்டு செல்ல தொடங்கி விடும். இந்த நிலையில் தற்போது சொந்த நாட்டுக்கு முன்கூட்டியே திரும்பிசெல்ல பறவைகள் தயாராகி வருகின்றன என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்