கரூர்
லாலாபேட்டைக்கு வந்த வெளிநாட்டு பறவைகள்
|லாலாபேட்டைக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கின.
தமிழகத்தில் உள்ள 13 நீர்நிலைகளில் பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன. இந்த சரணாலயங்களில் ஆஸ்திரேலிய, ஐரோப்பிய, ஆசிய நாடுகளின் பறவைகள் இனப்பெருக்கத்திற்காகவும், உணவிற்காகவும் வருகின்றன. இந்த நிலையில் கரூர் மாவட்ட மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் லாலாபேட்டை சந்தப்பேட்டை அருகே உள்ள புளிய மரத்தில் வெளிநாட்டு பறவைகள் வந்து குடிபுகுந்து வருகிறது. இதை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்து சென்று வருகின்றனர். லாலாபேட்டையில் ஆண்டிற்கு ஒருமுறை கோடை சீசனில் இந்த பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன. இந்த பறவை கிழக்கு கனடா போன்ற பகுதிகளில் குளிர்ந்த பகுதியில் இனப்பெருக்கம் செய்து இடம்பெயர்ந்து இங்கு வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக இதனுடைய வாழ்விடம் மிகவும் பொதுவான மற்றும் பரவலான அதிக கரையோரங்களில் மரங்கள் இருக்கும் பகுதியைத்தான் இது தேடி வருகின்றன. மேலும் இதற்கு தேவையான உணவு போன்றவற்றை பார்க்கும்போது லாலாபேட்டை காவிரியின் கரை ஓரமாக உள்ளதால் மீன்களை பிடித்து தின்று உயிர் வாழ்ந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து இப்பகுதி மக்கள் இந்த வெளிநாட்டு பறவையினை பார்த்த வண்ணம் செல்கின்றனர்.