< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
கிராம உதவியாளர் தேர்வுக்கு இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்
|30 Nov 2022 12:15 AM IST
கிராம் உதவியாளர் தேர்வுக்கு இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு முழுவதும் வருகிற 4-ந்தேதி கிராம உதவியாளர் பணியிடத்துக்கான தேர்வு நடக்கிறது. தேனி மாவட்டத்தில் 8 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை இணையதள மூலம் பதிவிறக்கம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களில் தெரிவித்துள்ள தொலைபேசி எண் மற்றும் விண்ணப்பதாரர் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இணையதள முகவரிக்கான இணைப்புகள் நேரடியாக அனுப்பப்படும். ஏற்கனவே விண்ணப்பிக்க பயன்படுத்திய https://www.tn.gov.in, https://cra.tn.gov.in, theni.nic.in ஆகிய இணையதள முகவரிகளின் மூலமும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.