< Back
மாநில செய்திகள்
வாலிபருக்கு   3 ஆண்டு சிறை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
12 Nov 2022 12:15 AM IST

கொடைக்கானலில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறப்பட்டது.

கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 31). இவர், கடந்த ஆண்டில் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை பொது இடத்தில் வைத்து தாக்கியதோடு, தகாத வார்த்தையால் பேசி அவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்து சென்றார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.

மேலும் அவர் மீது கொடைக்கானல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கார்த்திக், குற்றம்சாட்டப்பட்ட ரஞ்சித்குமாருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால், மேலும் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்