< Back
மாநில செய்திகள்
சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவனுக்கு, எம்.எல்.ஏ. நிதிஉதவி
விருதுநகர்
மாநில செய்திகள்

சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவனுக்கு, எம்.எல்.ஏ. நிதிஉதவி

தினத்தந்தி
|
1 Aug 2022 1:06 AM IST

சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவனுக்கு, எம்.எல்.ஏ. நிதிஉதவி வழங்கினார்.

சிவகாசி,

சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் பள்ளப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் புவனராஜன். மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு சிலம்ப போட்டியில் பரிசு பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மாநில அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று நேபாளத்தில் வருகிற 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடை பெற உள்ள சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். இந்த மாணவனின் சாதனையை பாராட்டிய சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், மாணவன் புவனராஜன் நேபாளம் சென்று வர தேவையான போக்குவரத்து செலவுகளை ஏற்றுக்கொண்டு அதற்கான செலவு தொகையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது மாணவனின் பெற்றோர் மற்றும் காங்கிரஸ் வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.


மேலும் செய்திகள்