< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
மாநில மகளிர் கால்பந்து அணிக்கு ஈரோட்டில் வீராங்கனைகள் தேர்வு
|15 Aug 2023 6:16 AM IST
மாநில மகளிர் கால்பந்து அணிக்கு ஈரோட்டில் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனா்.
தமிழ்நாடு மிக இளையோர் (சப்-ஜூனியர்) பெண்கள் கால்பந்து அணிக்கான தேர்வு போட்டி கடந்த 2 நாட்கள் ஈரோட்டில் நடந்தது. ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் பள்ளிக்கூட மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 134 மாணவிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தேர்வுக்குழு உறுப்பினர்களாக நாமக்கல் மாவட்ட விளையாட்டு அதிகாரி கோகிலா, அரசு மாணவிகள் விளையாட்டு விடுதி பயிற்சியாளர்கள் பி.சத்யா, கலா, ரேகா ஆகியோர் செயல்பட்டனர். நேற்று இந்த அணி இறுதி தேர்வு போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் சிறப்பாக விளையாடிய 22 வீராங்கனைகள் தமிழ்நாடு மிக இளையோர் கால்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.