< Back
மாநில செய்திகள்
ராஜீவ்காந்தி படத்துக்கு  மலர் தூவி மரியாதை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

ராஜீவ்காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை

தினத்தந்தி
|
22 May 2022 5:39 AM IST

நெல்லையில் நினைவு தினம் அனுசரிப்பு: ராஜீவ்காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் பங்கேற்பு

நெல்லை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை கொக்கிரகுளம் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், பொருளாளர் ராஜேஷ்முருகன், பொதுச்செயலாளர்கள் சொக்கலிங்ககுமார், பாக்கியகுமார், துணைத்தலைவர்கள் கவிபாண்டியன், சிவன்பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்