தமிழகத்தில் முதல் முறையாக காவல்துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன: டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி
|காவல்துறையில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுள்ளதாக, தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதன்முறையாக காவல்துறையில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுள்ளதாக, தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
பழங்குடியினருக்கான குற்றங்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகளை முறையாக கையாள்வது குறித்து, 50 துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு உதகையில் சிறப்பு பயிற்சி முகாம் தொடங்கியது.
இந்த பயிற்சி முகாமை தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். இதில் 37 மாவட்டங்களை சேர்ந்த துணை காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி. சைலேந்திர பாபு ,
காவல் நிலையங்களில் 2300 வரவேற்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் கனிவாகப் பேசி, புகார்களை பதிவு செய்வது குறித்து 3 மாத பயிற்சி அளிக்கப்பட்டது. . காவல் துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டால்தான் சிறப்பாக பணியாற்ற முடியும். தமிழகத்தில் முதல் முறையாக காவல் துறையில் முழு பணியிடங்கள் நிரைப்பட்டுள்ளன. என தெரிவித்துள்ளார்.
"முதல்முறையாக காவல்துறையில் No Vacancy.." - தமிழக டி.ஜி.பி.சைலேந்திர பாபு#tamilnadu | #dgpsylendrababu | #police | #si |#thanthitvhttps://t.co/0IDanOCcg0
— Thanthi TV (@ThanthiTV) May 25, 2023