< Back
மாநில செய்திகள்
50 ஆண்டுகளில் இதுவே முதல் முறை: புதிய உச்சத்தை தொட்ட முட்டை விலை...!
மாநில செய்திகள்

50 ஆண்டுகளில் இதுவே முதல் முறை: புதிய உச்சத்தை தொட்ட முட்டை விலை...!

தினத்தந்தி
|
8 Jan 2023 9:24 PM IST

முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தி ரூ.5.65 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்,

முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.65 காசுகள் என்பது கடந்த 50 ஆண்டுகால தமிழக கோழிப் பண்ணை வரலாற்றில் இதுவே முதல் முறை.

முட்டை ஒன்றின் நேற்றைய பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.55 காசுகளில் இருந்து 10 காசுகள் உயர்த்தி ரூ.5.65 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று இரவு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை (9-1-2023) காலை முதல் அமலுக்கு வருகிறது. தற்போது குளிர்காலம் என்பதால் முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

நாமக்கல் பகுதிகளில் இருந்து தற்போது வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் குளிர் நிலவுவதால் அங்கு முட்டையின் நுகர்வும் விற்பனையும் அதிகரித்து உள்ளது. இதனால் நாமக்கல் பகுதியில் இருந்து அதிகளவு அனுப்பப்பட்டு வருகிறது. அதே சமயம் பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் பண்ணையாளர்கள்.

மேலும் செய்திகள்