< Back
மாநில செய்திகள்
தேர்த்திருவிழாவுக்காக அந்தியூர் குருநாதசாமி கோவிலில் கொடியேற்றம்
ஈரோடு
மாநில செய்திகள்

தேர்த்திருவிழாவுக்காக அந்தியூர் குருநாதசாமி கோவிலில் கொடியேற்றம்

தினத்தந்தி
|
26 July 2023 9:42 PM GMT

தேர்த்திருவிழாவுக்காக அந்தியூர் குருநாதசாமி கோவிலில் கொடியேற்றப்பட்டது.

அந்தியூர்

அந்தியூர் புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழாவுக்காக கடந்த 19-ந் தேதி பூச்சாட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் மடப்பள்ளியில் இருந்து சாமி ஊர்வலமாக வனக்கோவிலுக்கு மேளதாளம் முழங்க அழைத்து செல்லப்பட்டது.

அதைத்தொடர்ந்து வனக்கோவிலில் குருநாதசாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் 75 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் தயார் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு கொடிக்கம்பத்தை நிறுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அடுத்த மாதம் 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தேர்த் திருவிழா நடைபெறுகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்