< Back
மாநில செய்திகள்
பல மாதங்களாக கரடு முரடாக கிடக்கும் நல்லியம்பாளையம் ரோடு
ஈரோடு
மாநில செய்திகள்

பல மாதங்களாக கரடு முரடாக கிடக்கும் நல்லியம்பாளையம் ரோடு

தினத்தந்தி
|
6 July 2023 3:01 AM IST

பல மாதங்களாக கரடு முரடாக கிடக்கும் நல்லியம்பாளையம் ரோட்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு பழையபாளையத்தில் இருந்து நல்லியம்பாளையம் வழியாக ரங்கம்பாளையம் செல்லும் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் அமைக்கும் பணி நடந்தது. குழாய்கள் அமைக்கப்பட்டு, ஆங்காங்கே இணைப்பு தொட்டிகளும் கட்டப்பட்டன. பின்னர் சாலை உடைக்கப்பட்டு தோண்டப்பட்ட இடத்தில் ஜல்லிகள் கொட்டப்பட்டன. அதன்பின்னர் எந்த மேம்பாட்டு பணியும் செய்யப்படவில்லை. எனவே ரோடு முழுமையாக கரடு முரடாக உள்ளது. பழைய பாளையத்தை அடுத்து உள்ள பெரும்பள்ளம் ஓடை முதல் நல்லியம்பாளையம் ஓடை வரை ரோடு மிகவும் பாதிப்படைந்து கிடக்கிறது. இந்த வழியாக தினமும் காலையும், மாலையும் பள்ளி வாகனங்கள் செல்கின்றன. ரங்கம்பாளையம், ஜீவாநகர், ரெயில் நகர், நல்லியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச்செல்லும் பெற்றோர் அதிகமானோர் இருசக்கர வாகனங்களில் செல்கிறார்கள். ஏற்கனவே குறுகிய இந்த சாலையில் பாதி ரோட்டுக்கும் மேல் பழுதடைந்து, கரடு முரடாக, குண்டும்-குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலை உள்ளது. அவசரமாக செல்பவர்கள் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர்.

எனவே நல்லியம்பாளையம் ரோட்டை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்