< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  இலவச சைக்கிள் வழங்கும் பணி:  கலெக்டர் தொடங்கி வைத்தார்
தேனி
மாநில செய்திகள்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
11 Aug 2022 9:56 PM IST

தேனி மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் பிளஸ்-1 முடித்து தற்போது பிளஸ்-2 படித்து வரும் 11 ஆயிரத்து 807 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இந்த சைக்கிள் வழங்கும் பணியின் தொடக்க விழா தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, இலவச சைக்கிள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். விழாவில், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்