தேனி
பள்ளி மாணவ, மாணவிகளுக்குமாவட்ட தடகள போட்டி
|பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது.
பள்ளி கல்வித்துறை சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது. மாவட்டத்தில் 8 வட்டார அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த 950 மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.
அந்த மாணவ, மாணவிகள் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றனர். முதல் நாளில் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். 2-வது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) தடகள போட்டிகள் நடக்கின்றன. இந்த போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.