< Back
மாநில செய்திகள்
விற்பனைக்காக   கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
தேனி
மாநில செய்திகள்

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

தினத்தந்தி
|
16 Sept 2022 8:04 PM IST

பெரியகுளத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்

பெரியகுளம் தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கைலாசப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் அங்கு நின்று கொண்டிருந்த 3 பேர் ஓட்டம் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசார் விரட்டி சென்று 2 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள், அதே ஊரை சேர்ந்த பாஸ்கரன் (வயது 41), கமலஹாசன் (38) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய கார்த்திக் (32) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்