< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்டும்
|23 July 2022 7:45 PM IST
சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்தனர்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இந்து முன்னணி நகர தலைவர் செல்வம் தலைமையில், மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் வந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் "தேனி நகர் மற்றும் பெரியகுளம் சாலை ஓரங்களில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் மக்களுக்கு நிழல் தரும் வகையில் உள்ளது.
நெடுஞ்சாலைத்துறையினர் சமீப நாட்களாக சாலை விரிவாக்கம் என்ற பெயரில் 45-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டுவதற்கு தனியாருக்கு டெண்டர் அடிப்படையில் அனுமதி கொடுத்துள்ளனர். இந்த மரங்களை வெட்டினால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். எனவே, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் வகையில் மரங்களை வெட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று கூறினர்.