< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நிலம் எடுப்பு தொடர்பாக பயிற்சி
|8 July 2022 10:57 PM IST
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நிலம் எடுப்பு தொடர்பாக 2 நாட்கள் பயிற்சி வகுப்பு நடந்தது
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் மதுரை கிளை சார்பில் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நிலம் எடுப்பு தொடர்பாக 2 நாட்கள் பயிற்சி வகுப்பு நடந்தது. கல்லூரி விரிவுரையாளர் ரத்தினசாமி கலந்துகொண்டு, நிலம் எடுப்பு சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து பயிற்சி அளித்தார்.
இதில் துணை கலெக்டர்கள், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள், இளநிலை வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் முரளிதரன் வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முரளி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.