தேனி
மதுபானம் வாங்கிக் கொடுக்காததால்தொழிலாளிக்கு கத்திக்குத்து
|தேனியில் மதுபானம் வாங்கி கொடுக்காததால் தொழிலாளியை கத்தியால் குத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி கருவேல்நாயக்கன்பட்டி வாசுகி காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). சுமைதூக்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது நண்பர் கதிரேசன் என்பவருடன், புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் பார் முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், முருகனிடம் தங்களுக்கு மதுபானம் வாங்கிக் கொடுக்குமாறு கூறினர். அவர் வாங்கிக் கொடுக்காததால் அவர்கள் 2 பேரும் சேர்ந்து முருகனை தாக்கினர்.
அப்போது அதில் ஒருவர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் முருகனை குத்தினார். இதில் அவருக்கு தலை, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்த முருகன் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.