< Back
மாநில செய்திகள்
மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு மட்டுமே 9-ந்தேதி வரை காலாண்டு விடுமுறை - மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் விளக்கம்
மாநில செய்திகள்

மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு மட்டுமே 9-ந்தேதி வரை காலாண்டு விடுமுறை - மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் விளக்கம்

தினத்தந்தி
|
6 Oct 2022 5:49 AM IST

தமிழக அரசு வெளியிட்டுள்ள 9-ம் தேதி வரை விடுமுறை என்ற அறிவிப்பு, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 30-ந்தேதி நிறைவடைந்த நிலையில் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக்டோபர் 10-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு அக்டோபர் 13-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதே சமயம் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் காலாண்டு விடுமுறை முடிந்து வரும் 10-ந்தேதி பள்ளிகள் திறக்க வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பானது, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி அளித்துள்ள விளக்கத்தில், தமிழக அரசு வெளியிட்டுள்ள 9-ம் தேதி வரை விடுமுறை என்ற அறிவிப்பு, மெட்ரிக் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளார். எனவே, சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இன்று முதல் மீண்டும் இயங்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்