< Back
மாநில செய்திகள்
காவியங்கள், கதைகளை தீட்டிய கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் கடலில் அமைப்பதில் எந்த தவறும் இல்லை
மாநில செய்திகள்

காவியங்கள், கதைகளை தீட்டிய கருணாநிதிக்கு 'பேனா நினைவுச்சின்னம் கடலில் அமைப்பதில் எந்த தவறும் இல்லை'

தினத்தந்தி
|
6 Feb 2023 2:22 AM IST

காவியங்கள், கதைகளை தீட்டிய கருணாநிதிக்கு ‘பேனா நினைவுச்சின்னம் கடலில் அமைப்பதில் எந்த தவறும் இல்லை’ வைகோ பேட்டி.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் நேற்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை மெரினா கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பே கிடையாது. எரிச்சலும், ஆத்திரமும் உள்ளவர்கள்தான் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். நர்மதா நதியினிலே எப்படி பட்டேலுக்கு அவ்வளவு பெரிய சிலை வைத்தார்கள். அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவித்தார்களா? பட்டேல் என்பவருக்கு சிலை வைக்கும் போது கருணாநிதிக்கு, கடலில் பேனா நினைவுச்சின்னத்தை அமைப்பதில் எந்த ஒரு தவறும் கிடையாது. காவியங்களையும், கதைகளையும், கவிதைகளையும் தீட்டிய அவருக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பதை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்