< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
சுகாதாரம், மருத்துவத்துறை பணியாளர்களுக்கு மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள்
|30 Oct 2022 12:15 AM IST
சுகாதாரம், மருத்துவத்துறை பணியாளா்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி தேனி மாவட்ட அளவில் சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. போட்டிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார். இதில் டாக்டர்கள், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டம், கைப்பந்து, எறிபந்து, குண்டு எறிதல், பேட்மிட்டன், கேரம், செஸ் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் போக்ஸோ ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.