< Back
மாநில செய்திகள்
விசைப்படகுகளில் சீன என்ஜின்கள் பொருத்துவதற்கு   நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

விசைப்படகுகளில் சீன என்ஜின்கள் பொருத்துவதற்கு நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு

தினத்தந்தி
|
22 May 2022 12:45 AM IST

ராமேசுவரம், மண்டபம் பகுதியில் விசைப்படகுகளில் சீன என்ஜின்கள் பொருத்துவதற்கு நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம், மண்டபம் பகுதியில் விசைப்படகுகளில் சீன என்ஜின்கள் பொருத்துவதற்கு நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

சீன என்ஜின்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித்தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகின்றது. அதுபோல் மாவட்டத்திலேயே அதிகமான விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளைக் கொண்ட பகுதி என்றால் அது ராமேசுவரம் பகுதி தான்.

ராமேசுவரம், பாம்பன் பகுதியில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகளும் உள்ளன.

இந்த நிலையில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் உள்ள விசைப்படகுகளில் அதிக குதிரை திறன் கொண்ட சீன என்ஜின்களை பொருத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் உடனடியாக சீன என்ஜின்களை விசைப்படகுகளில் பொருத்துவதை மீன்வளத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக நாட்டுப்படகு மீனவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

விளம்பர பலகை

மண்டபம் தென்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 10 விசைப் படகுகளில் சீன என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதாகவும் உடனடியாக அதை தடுத்து நிறுத்தி சீன என்ஜின்களை பறிமுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாம்பன் பஸ் நிறுத்தம் எதிரே அனைத்து நாட்டுப்படகு மீனவர்கள் சார்பில் விளம்பர பலகை ஒன்று மீன்வளத்துறை அதிகாரிகளை வலியுறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
மேலும் செய்திகள்